19th of December 2013
ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பெயர்களைப் பயன்படுத்தி செயற்பட்டுவந்ததாகக் கூறப்படுகின்ற 300 பேர் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் லக் ஷ்மன் செனவிரத்ன நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தி நேற்று புதன்கிழமை இடம்பெற்ற 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் தெரிவுக்குழு அறிக்கையிடல் மீதான அமைச்சுக்களின் கீழான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்றைய விவாதத்தின் போது உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பி. மங்கள சமரவீர, மாணிக்கக்கற்கள் பதிக்கப்பட்டதும் 800 வருடங்கள் பழைமையானதுமான தொல்பொருள் ஒன்றை ஜப்பானியப் பிரஜை ஒருவருக்கு விற்பனை செய்யமுற்பட்ட போது அது பொலிஸாரிடம் அகப்பட்டதாகப் பத்திரிகைகளில் தகவல்கள் வெளியாகியிருந்ததாகவும், இதன் பின்னணியில் ஜனாதிபதியின் இணைப்பாளர் ஒருவர் செயற்பட்டிருந்ததாகவும் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இடம்பெற்று வருகின்ற விசாரணை நடவடிக்கைகளின் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து வெளிப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
அதுமாத்திரமின்றி, மங்கள சமரவீர எம்.பி. கூறுவதுபோன்றதொரு இணைப்பாளர் ஜனாதிபதிக்குக் கிடையாது என்று தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதியினதும் முக்கியஸ்தர்களினதும் பெயர்களை விற் றுப்பிழைக்கும் நபர்கள் தொடர்பில் விசார ணைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன என்றார்.
No comments:
Post a Comment