16th of December 2013
வடக்கு கடல் எல்லையை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்று நாடாளுமன்றில் சுட்டிக்காட்டினார்
எதிர்க்கட்சிப் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க . நாடாளுமன்றில் நடைபெற்ற கடற்றொழில் அமைச்சு மீதானகுழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது :
மீன் விலை நாளாந்தம் அதிகரிக்கின்றது . அண்மைக் காலமாக அது சிறிதளவும் குறைந்ததாகத் தெரியவில்லை . நவீன தொழில்நுட்பங்கள் இருக்கின்றன . துறைமுகங்கள் அமைக்கப்படுகின்றன .
ஆனால் , பிடிப்பதற்கு மீன்தான் இல்லை . இவற்றை யார் பிடித்துச் செல்கிறார்கள் ? வடக்கு கடல் பகுதியை இந்தியா ஆக்கிரமித்துள்ளது . ஆனால் , இதற்கு அமைச்சர்களால் எதுவும் ஒன்றும் செய்யமுடியாமலுள்ளது .
தென்னிந்திய அரசுடன் வட்டமேசை மாநாடு
அதேவேளை , இந்த விவாதத்தில் உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ , மீனவர்கள் பிரச்சினை குறித்து அரசும் தென்னிந்திய அரசும் வட்ட மேசை மாநாட்டை நடத்தி ஒரு தீர்வுக்கு வரவேண்டும் .
இலங்கையிலுள்ள சிறைச்சாலைகள் போன்றதல்ல இந்தியாவில் உள்ளவை . அங்கு வழங்கப்படும் உணவுகளைக் கூட உண்ண முடியாது . இதனால் கைது செய்யப்படும் இலங்கை மீனவர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் . 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மீன்பிடித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .
இதனை வைத்து இத்துறையைக் கட்டியயழுப்ப மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் . என்றார் . 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மீன்பிடித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment