14th of December 2013
இலங்கையின் வடக்கில் அரேபிய புரட்சிக்கு நிகரான புரட்சி ஒன்றை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாடு நடைபெறும் காலப்பகுதியான மார்ச் மாதத்தில் இந்த புரட்சி முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கில் உள்ள புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் மக்களை இணைத்து கொண்டு குழப்பமான நிலைமையை ஏற்படுத்த கூட்டமைப்பு தயாராகி வருவதாக தெரியவருகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறியை அந்த பதவியில் இருந்து நீக்கி விட்டு, தமக்கு சாதகமாக தமிழ் சிவில் அதிகாரி ஒருவரை ஆளுநராக நியமித்து கொள்ள வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நோக்கம் என அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
இதனிடையே வடக்கு வான் பரப்பு இலங்கை விமானப்படையின் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் உலக தமிழர் பேரவையின் ஊடாக இந்த கோரிக்கை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment