4th of December 2013
நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் ரொக்சிகனின் படுகொலை தொடர்பில் வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் பொலிஸாரினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டதாக தெரியவருகிறது.
குறித்த கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரினாலேயே நேற்று மாலை அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்தவாரம் கொலை செய்யப்பட்டிருந்த நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் ரொக்சிகன் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என ஆரம்பத்தில் நம்பப்பட்டது. எனினும் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையின் விளைவாக அவர் படுகொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து விசாரணைகள் கொழும்பிலிருந்து சென்ற விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே நேற்று மாலை வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் விசாரணைக்களுக்காக அழைக்கப் பட்டதாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment