Tuesday, December 17, 2013

உப்புவெளி வில்கம்வெஹர பகுதியில் மூன்று வாகனங்கள் தீ வைத்து எரிப்பு!

17th of December 2013
உப்புவெளி பொலிஸ் பிரிவில் திருகோணமலை - அநுராதபுரம் வீதியில் வில்கம்வெஹர பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாவிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஸ்கெச்டர் மற்றும் டிப்பர் வாகனம் ஒன்று இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் காவலாளி ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிந்த நிலையில் நேற்று  இரவு 10.55 அளவில் அங்கு சென்ற 7 பேர் கொண்ட குழு காவலாளியை தாக்கி வாகனங்களுக்கு தீ வைத்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் 95 லட்சம் ரூபாவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

உப்புவெளி பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...