5th of December 2013
சுதந்திர மாணவர் முன்னணி எனும் அமைப்பொன்றை யாழ். மாவட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு உருவாக்கியுள்ளது.இந்த அமைப்பு உருவாக்கம் தொடர்பான நிகழ்வு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த தலைமையில் யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டார். இந்த அமைப்புக்கு யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களையும் சேர்ந்த 17 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த உறுப்பினர்கள் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலில் கிராம அலுவலர்களின் கீழ் சமூகங்களிலுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்காகவும் செயற்படுவர் என மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
No comments:
Post a Comment