11th of December 2013
தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பல மாதங்களாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததை அடுத்து மத்திய அரசாங்கம் ஒருமாதிரியாக செயற்படத் தொடங்கியதால் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான கூட்டம் இந்த மாதம் முடிவில் நடைபெறவுள்ளது.
இரண்டு நாட்டு மீனவர்களும்; சந்திப்புக்கான திகதியை தீர்மானிப்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சும் தமிழ்நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு கிடைத்த செய்திகள் தெரிவித்தன.
இலங்கை மற்றும் இந்தியச் சிறைகளில் மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தப் பிரச்சினைபற்றி தமிழ்நாட்டு அரசாங்கத்திடமிருந்து அதன் கருத்தை எதிர்பார்த்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுஜாதா சிங் பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கை வந்திருந்தபோது தெரிவித்தார். இந்தச் சந்திப்பு இருதரப்பு மீனவர்களின்; வாழ்வாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண அவசியமானதெனவும் அவர் கூறினார்.
இலங்கையில் 88 இந்திய மீனவர்களும் இந்தியாவில் 120 இலங்கை மீனவர்களும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்

No comments:
Post a Comment