Sunday, December 22, 2013

தமிழ் மக்களுக்காக அனுப்பி வைக்கப்படும் பணத்தை புலிகள் பயன்படுத்துகின்றனர்: கோதபாய ராஜபக்ஷ!

23rd of December 2013
தமிழ் மக்களுக்காக அனுப்பி வைக்கப்படும் பணத்தை புலிகள் பயன்படுத்தினர் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
 
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் தமிழ் மக்களுக்காக நிதி திரட்டி அனுப்பி வைத்ததாகவும், அந்தப் பணத்தை புலிகள் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ஜொன் நெக்ரோபொன்டிக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பின் போது இந்தத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

அடிப்படைவாத காரணிகளுக்காக தமிழ்ப் புலம்பெயர் மக்கள் பணம் அனுப்பி வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மாறாக தாம் அனுப்பி வைக்கும் பணம் தமிழ் மக்களுக்கு சென்றடையும் என்ற நம்பிக்கையில் புலம்பெயர் மக்கள் பணம் அனுப்பி வைப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இந்தப் பணத்தை பயன்படுத்தி புலிகள் ஆயுதங்களை கொள்வனவு செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment