Wednesday, December 18, 2013

சர்வதேசத்தின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினைக்கோ தனிஈழத்துக்கோ இடமில்லை: பொது பல சேனா!

19th of December 2013
சர்வதேசத்தின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினையையோ அல்லது தனித் தமிழீழத்தினையோ உருவாக்க கோருவோர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பொது பல சேனா எச்சரித்துள்ளது.

அதன்படி இலங்கையில் தனித் தமிழீழத்திற்கோ முஸ்லிம் தீவிரவாதத்திற்கோ இடமில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் தீவிரவாதக் கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பினால் அதற்கான பின்விளைவுகள் மிக மோசமாக அமையும் என எச்சரித்தாhர். 

எனினும் முஸ்லிம் தீவிரவாத கொள்கைகளை பௌத்த நாட்டில் பரப்பி பௌத்த சின்னத்தை அழித்து முஸ்லிம் நாடாக இலங்கையை மாற்றவே பலர் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இருப்பினும் தேசிய பாதுகாப்பிற்காகவே அரசாங்கம் பர்தா, தொப்பி அணியக்கூடாதென வலியுறுத்துகின்றது. இதனை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றார்.

சில முஸ்லிம் தீவிரவாதிகளின் பேச்சை கேட்டு ஒட்டுமொத்த முஸ்லிம்களும் அரசாங்கத்தினை பகைத்துக் கொள்ள கூடாது எனச் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் சர்வதேச பிரிவினைவாதிகளின் பேச்சைக் கேட்டு இலங்கையில் பிரிவினை வாதத்தினை உருவாக்கவோ அல்லது தனித் தமிழீழத்தினை உருவாக்கவோ முடியாது எனவும் குறிப்பிட்டார். 

அவ்வாறானதொரு எண்ணம் எவருக்காவது இருக்குமாயின் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment