23rd of December 2013
தரவுகளை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பதாக ஜனாநாயக தேசியக் கூட்டணியின் அனுரகுமார திசாநாயக்க எம்.பி. யினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிராகரிப்பதாக பாராளுமன்றத்தில் தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா , அவரது கூற்றுக்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாரில்லை என்றும் கூறினார் .
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற 2014 ஆம் ஆண்டுக்காள வரவு - செலவுத்திட்டத்தின் இறுதி நாள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .
நிதி திட்டமிடல் அமைச்சு மீதான விவாதத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறுகையில் ,
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய நிறுவனங்களில் இருந்து அரசாங்கம் கடனைப் பெறுகின்ற போது எடுத்த எடுப்பிலேயே அது கிடைக்கப் பெற்று விடுவதில்லை . மற்றும் நாம் வழங்கும் தகவல்களை ஆராயாது செயற்படுவதற்கு அந்த நிறுவனங்கள் ஒன்றும் குழந்தைத் தனம் படைத்தவை அல்ல . இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் தொடர்பில் எம்மால் வழங்கப்படுகின்ற தகவல்கள் மேற்படி நிதி நிறுவனங்களால் நன்கு ஆராயப்பட்டு பகுப்பாய்வுக்கும் உட்படுத்தப்படுகின்றது . அது மாத்திரமன்றி இலங்கை நிலைமை குறித்தும் ஆராயப்படுகின்றது . இவ்வாறான பின்னணியின் அடிப்படையிலேயே கடன்கள் வழங்கப்படுகின்றன .
எனவே , பொருளாதார வளர்ச்சி வீதம் தொடர்பில் அதிகாரிகளைப் பயன்படுத்தி தகவல்கள் பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அனுரகுமார திசாநாயக்க எம்.பி. யினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை நாம் மறுக்கின்றோம் .
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளதான இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் புள்ளி விபரத்துடன் எமது அதிகாரிகள் கணிப்பீடு செய்துள்ள புள்ளிவிபரத் தகவல்கள் ஒத்துப் போயுள்ளன .
எனவே , அனுர குமார எம்.பி. யினால் முன்வைக்கப்பட்டுள்ள தகவல்களானது அவருக்கு யாரோ ஒருவரால் வழங்கப்பட்ட தவறான தகவலாகும் என்றார் .
No comments:
Post a Comment