4th of December 2013
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தின் விசேட பிரதிநிதி சலோகா பியானி
தலைமையிலான குழுவினர் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள
ஆளுநர் அலுவலகத்தில் 03 டிசெம்பர் 2013 அன்று சந்தித்து கலந்துரையாடினார்.
மேலும் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின் அப்பிரதேச மக்களின்
மீளக்குடியமர்வு, அபிவிருத்தி, மக்களின் வாழ்வாதார மேம்பாட்டு, தொழில்
வாய்ப்புக்கள், மனித உரிமை மேம்பாடு ஆகியவற்றிற்கு அதிமேதகு ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ச அவர்களும் அவர்களின் அரசாங்கமும் மேற்கொண்ட திட்டங்களை ஆளுநர் விரிவாக
எடுத்துரைத்தார். மேலும் வட மாகாணத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும் ஆளுநர்
விபரித்தார்.
ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், பிரதி பிரதம செயலாளர் (திட்டமிடல்)
திரு.இ.உமாகாந்தன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment