Monday, January 6, 2014

அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது – விமல் வீரவன்ச!

Monday, 6th of January 2014
அரசாங்கத்தை கவிழ்க்கும் முனைப்புக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
 
ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் செய்யும் வகையில் அமெரிக்கா செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் என்பது தெளிவாகத் தெரிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முயற்சிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு அதிகளவு சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், அமெரிக்கா ஏனைய உறுப்பு நாடுகள் மீது அழுத்தம் செலுத்தக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பமாக சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து அமெரிக்கா செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் நிறைவில் அமெரிக்காவின் உள்நோக்கம் என்னவென்பது தெளிவாக புலனாகும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment