14th of December 2013
மன்னார் முருங்கன் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து 14 நாற்களுக்கு வவுனியா பயங்கரவாத தடுப்புப் பொலிஸில் பிரிவில் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் முருங்கன் பகுதியில் உள்ள வீதி மதில்களில் கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி புலிகளின் மாவீரர் தினம் என எழுதிக்கொண்டிருந்ததாக சந்தேகத்தின் பேரில் அப்பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை இராணுவத்தினர் கைது செய்து முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இவர்கள் முருங்கன் பொலிஸாரினால் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக இவர்கள் தொடர்ந்தும் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவில் தடுத்து வைத்து விசாரனைகள்; மேற்கொள்;ளப்பட்டு வந்தது.
இந்த நிலையில் குறித்த மூவரையும் இன்று வெள்ளிக்கிழமை வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் மன்னார் நீதிமன்றதத்தில் பதில் நீதவான் இ. கயஸ் பல்டானோ முன்னிலையில் ஆஜர் படுத்தினர். குறித்த சந்தேக நபர்களை தொடர்ந்தும் விசாரனைகள் செய்ய வேண்டும் எனக் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களை தொடர்ந்தும் 14 நாற்கள் விசாரனைகளை மேற்கொள்ள வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியதோடு குறித்த மூவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
மன்னாரில் கைது செய்யப்பட்ட மூவரையும் தொடர்ந்து 14 நாட்கள் வவுனியா பயங்கரவாத தடுப்புப்பிரிவில் வைத்து விசாரிக்க உத்தரவு.

No comments:
Post a Comment