21st of December 2013
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
டுபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் 285 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்
கை49 .4 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.
குமார் சங்கக்கார அணி சார்பில் அதிக பட் ஓட்டங்களாக 58 ஓட்டங்களை பெற்றார்.
இதன்போது அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 12,000 ஓட்டங்களை கடந்த முதலாவது விக்கட் காப்பாளராகவும் , இரண்டாவது இலங்கையராகவும் , உலகளாவிய ரீதியில் இந்த இலக்கை எட்டிய 4 ஆவது வீரராகவும் சாதனை ஏட்டில் பதிவானார்.
பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஜூனைட் கான் 3 விக்கட்டுக்களையும் , சஹீட் அப்ரிடி 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஒவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 284 ஓட்டங்களை பெற்றது.
அஹமட் ஷெஹ்சாட் 124 ஓட்டங்களை பெற்றார்.5 போட்டிகளை இந்த தொடரில் இரு அணிகளும் 1 க்கு 1 என்ற கணக்கில் சமநிலையிலுள்ளது.
No comments:
Post a Comment