21st of December 2013
வட பகுதியில் ஆயுள் காப்புறுதி பெற்றுக் கொள்ளாத மீனவர்கள் மற்றும் காப்புறுதி பொறாத படகுகளை வைத்திருக்கும் மீனவர்களுக்கு, மீன்பிடி அனுமதி பத்திரம் வழங்கப்படமாட்டாது என யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படும் என யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி தெரிவித்தார்.
சீரற்ற வானிலையின் போது ஏற்படும் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்வதும்,சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுப்பதுமே இந்த நடவடிக்கையின் நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.
மீன்பிடிக்கான அனுமதி பத்திரம் வழங்குவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்புரைக்கு அமையவே இந்த அலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் நடராஜா கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment