Tuesday, December 3, 2013

2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அடிப்படையில் இலங்கையின் சனத்தொகை 20,263,723 (20.26 மில்லியன்)!

4th of December 2013
2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அடிப்படையில் இலங்கையின் சனத்தொகை 20,263,723 (20.26 மில்லியன்)  என என சர்வதேச நாணய ஒத்துழைப்புக்கான சிரேஷ்ட அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

2011 மற்றும் 2012 இல் இடம் பெற்ற இக்கணக்கெடுப்புக்கமைய சிங்களவர்கள் 15,173,820 (15.17 மில்லியன்), தமிழர்கள் 31,13,247 (3.11 மில்லியன்) உம் இலங்கைச் சோனகர் 18,69,820 (1.86 மில்லியன்), பேகர
37,061 (0.03 மில்லியன்), மலே 40,189 (0.04 மில்லியன்) வேறு இனத்தவர் 29,568  (0.02 மில்லியன்) ஆவார் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இக்கணக்கெடுப்புக்காக 173 கோடி ரூபா செலவாகியுள்ளதுடன் 2013 ஓகஸ்ட் 19ஆம் திகதி வரை 1732,277,222.79 ரூபா செலவாகியுள்ளதோடு இதில் 868,742,666.72 ரூபா கணக்கெடுப்புக்கான ஊதியத்துக்காக செலாவாகியுள்ளதாக கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் அமுனுகம இதனைக் குறிப்பிட்டார்.

சிங்களவர் 15.17 மில்லியனில்  14.22 மில்லியன் (14,222,844) பேர் பௌத்தர்களாவர். இந்துக்கள் 2,554,806 (2.55 மில்லியன்), இஸ்லாமியர் 1,967,227(1.96 மில்லியன்), ரோமன் கத்தோலிக்கர் மற்றும் வேறு கிறுஸ்தவர்கள் 1,509,606 (1.50 மில்லியன்) மற்றும் வேறு மதத்தினர் 9,440 (0.009 மில்லியன்) ஆவர்.

இலங்கையில் வீடுகளின் எண்ணிக்கை 5,165,331 ஆகும் அவற்றுள் அதிகமான வீடுகளாக 592,064 வீடுகள் கம்பஹா மாவட்டத்திலேயே அமைந்துள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் 555,926 வீடுகளும் குறைந்தளவான வீடுகள் மன்னார் மாவட்டத்தில் 23,338 வீடுகள் அமையப்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment