Monday, December 2, 2013

தாய்லாந்தில் கலவரம்: பேச்சுவார்த்தைக்கு தயார் - பதவி விலகமாட்டேன் - பிரதமர் மறுப்பு!

3rd of December 2013
பாங்காக்::அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன். ஆனால் பதவி விலக  முடியாது என்று தாய்லாந்து பிரதமர் சினவத்ரா கூறியுள்ளார். தாய்லாந்தில் பெண் பிரதமர் யுங்லுக் சினவத்ரா தலைமைலான ஆட்சி நடைபெறுகிறது. கடந்த 2006ல் ஊழல் செய்ததற்காக இவரது சகோதரர் தக்ஷி சினவத்ராவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, இவர் ஆட்சியை பிடித்தார். இந்நிலையில், சமீபத்தில் அரசியல் குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும் சட்ட மசோதாவை பிரதமர் நிறைவேற்றினார். இது அவரது சகோதரரை காப்பாற்றும் முயற்சி என்றும், ஆனால் தக்ஷின் தான் உண்மையில் அதிகாரத்தை கையில் வைத்திருப்பதாகவும், சினவத்ரா பொம்மை ஆட்சி செய்வதாகவும் எதிர்கட்சி எம்பி சுதிப் தாக்ஸ்பான் கூறுகிறார்.

இவரது தலைமையில் பாங்காக்கில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் 5 பேர் பலியாகினர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பாங்காக்கில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுதிப், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை செய்த பின்னர்  பிரதமர் பதவிலிருந்து விலக 2 நாள்கள் கெடு விதிப்பதாகவும், ஆட்சி அதிகாரத்தை மக்கள் மன்றத்திடம் ஒப்படைக்கவேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து, நேற்றும் அரசு மற்றும் போலீஸ் தலைமையகம் ஆகியவற்றை முற்றுகையிட சென்ற போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மேல் கலவரக்காரர்கள் கற்களை எறிந்தனர். கலவரம் பெரிதானதை அடுத்து போலீசார் அவர்கள் மேல் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கலவரக்காரர்களை கலைத்தனர்.

இந்நிலையில் , பிரதமர் சினவத்ரா இருநாள் காலக்கெடுவை நிராகரித்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ கலவரத்தை அடக்கி அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். கலவரத்தை கட்டுபடுத்த ராணுவம் தயார் நிலையில் உள்ளது. ஆனால் பதவியை விட்டு விலகமுடியாது. அரசியலமைப்பு சட்டப்படி தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் மன்றத்திடம் பொறுப்பை அளிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமில்லை. அனைவருடனும் நிபந்தனைகள் இன்றி பேச்சு நடத்த தயாராக உள்ளேன். ’ என்று கூறினார்.

பிரதமர் சினவத்ரா, சட்டம் ஒழுங்கு கண்காணிப்பாளராக துணைபிரதமர் சுரபாங் டோவிசக்காய்குல்லை நேற்று நியமித்துள்ளார். ஆனால், இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் ‘போலீசார் மீது உயிரி ஆயுதத்தை பயன்படுத்துவோம்’ என்று எதிர்கட்சி குழு உறுப்பினர் சும்போல் ஜுல்லாசாய் கூறினார்.

எக்ஸ்ட்ரா தகவல்

சினவத்ரா
தாய்லாந்தின் முதல் பெண் பிரதமர். 45 வயதில் இவர் பிரதமர் ஆனதால், தாய்லாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.

No comments:

Post a Comment