15th of December 2013
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைக்
கூட்டத்தொடருக்கு முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியை பதவி
நீக்கம் செய்வதற்கு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், ஜெனீவா கூட்டத்தொடர் நடைபெறும்
காலத்தில் வடக்கிலுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களையும், தமிழ்
மக்களையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்கும் வகையில்
செயல்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டம் தீட்டியுள்ளதாகவும் அந்த
இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்பின்னர் இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் விமானங்கள் பறப்பதற்கு
தடைவிதிக்கும் வகையில் '''No fly Zone'' என வடக்குப் பிராந்தியத்தை ஐக்கிய
நாடுகள் சபையினால் பெயரிட வைப்பதற்கான முயற்சிகளையும் கூட்டமைப்பு
முன்னெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான ஆயத்தப் பணிகளில் புலம்பெயர் தமிழர் அமைப்பான குளோபல் தமிழ்
பேரவை ஈடுபட்டுள்ளதாம். அத்துடன், இதுகுறித்து வலியுறுத்த வேண்டுமென
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனிடம் கோரிக்கையொன்றையும் இந்த அமைப்பு
முன்வைக்கவுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் வடக்கில் மத்திய கிழக்கில் ஏற்படுத்தப்பட்ட புரட்சியைப்
போன்று அரசாங்கத்திற்கெதிரான பாரிய போராட்டங்களை முன்னெடுக்கவும் தமிழ்க்
கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் செய்தி
வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment