15th of December 2013
தமிழ்-சிங்கள மக்களுக்கிடையில் நல்ல தொடர்புகளை ஏற்படுத்துவதற்காக, முதலில் சிங்கள - தமிழ் உறவு முறை தொடர்பில் இரு இனங்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தெற்கில் கோஷமிடும் சில அரசியல்வாதிகள் இலங்கை சிங்களவர்களின் நாடு என்று கூறுகின்றனர். எனினும் 700 பேருடன் இலங்கைக்கு வந்த இளவரசர் விஜயன் மதுராபுரியை சேர்ந்த தமிழ் பெண்ணை மணமுடித்தார்.
இதனால் சிங்களவர்கள் தமிழர்களில் பாதி. மகாவம்சத்தை அடிப்படையாக கொண்டே நான் இதனை கூறுகிறேன்.
இதனால் சிங்களவர்கள் தமிழர்களுக்கு எதிராகவும் தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிராகவும் செயற்பட முடியாது என்றார்.
No comments:
Post a Comment