15th of December 2013
புத்தளம் மதுரங்குளி பகுதியில் பொலிஸ் காரும் முச்சக்கரவண்டியும் ஒன்றோடொன்று மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் பயணித்த மதுரங்குளி பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸ் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளுக்காக பொலிஸ் தலைமையகத்திலிருந்து விசேட குழுவொன்று மதுரங்குளி பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ் கோப்பாய் பகுதியில் வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியின் மொறகொட்டாஞ்சேனை பகுதியில் துவிச்சக்கரவண்டியொன்று வீதியைவிட்டு விலகி மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
விபத்து தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment