Wednesday, December 18, 2013

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பிரித்தானியா கவனம்!

19th of December 2013
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து பிரித்தானியா கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எ
 
திர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நடைபெறவுள்ள அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றும் கூட்டுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைச்சர் ஹூசோ ஸ்வெயார் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலைமைகள் குறித்து பொதுநலவாய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தின் உள்ளடக்கம் தொடர்பில் உறுப்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்திற்கு மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும் என அவா தெரிவித்துள்ளார். நம்பகமான சுயாதீனமான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே பிரித்தானியாவின் நிலைப்பாடு என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மார்ச் மாதத்திற்கு முன்னதாக குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment