Wednesday, December 18, 2013

கொள்­ளை­களில் ஈடு­பட்ட நால்­வ­ருக்கு இரு­பது வரு­ட­கால சிறைத்­தண்­டனை. வவு­னியா மேல்­நீ­தி­மன்றம் தீர்ப்பு!

19th of December 2013
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நான்கு பேருக்கு வவுனியா மேல்நீதிமன்றம்
இருபதுவருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது .
 
கடந்த 2006, 2007 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் வவுனியாவின் பல பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன .
 
இவர்களுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகளையடுத்து குறித்த நான்கு பேரும் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டனர் .
 
இதனையடுத்து நான்கு பேருக்கும் சுமார் இருபது வருடகால சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல்நீதிமன்ற நீதிவான் சந்திரமணி விஸ்வலிங்கம் தீர்ப்பளித்தார் .

No comments:

Post a Comment