17th of December 2013
கொழும்பிலிருந்து லண்டன் – ஹீத்துறு விமான நிலையம் நோக்கி பயணித்த இலங்கை ஏர்லைன்ஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் வெடி குண்டு இருப்பதாக தான் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டதாக குறித்த நபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி கொழும்பிலிருந்து ஹீத்துறு விமான நிலையத்தை நோக்கி பயணித்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதான ஒருவரினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில் விமானம் ஸ்டான்டெட் விமான நிலையத்தில் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
இந்த பிரச்சாரத்தை செய்த சந்தேகநபர் செல்ம்ஸ்போட் நீதிமன்றில் ஆஜர்படுத்தியவேளை, தான் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டதாக ஒத்துக் கொண்டுள்ளார்.
இதன்படி சந்தேகநபர் அடுத்த மாதம் 22ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கான தண்டனை அன்றைய வழக்கு விசாரணையின்போது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment