18th of December 2013
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளும் 5 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளன.
முதலாவது போட்டி சார்ஜா சர்வதேச விளையாட்டரங்கில் இன்று மாலை
இடம்பெறவுள்ளது. இலங்கை அணிக்கு எஞ்சலோ மெத்யூசும், பாகிஸ்தான் அணிக்கு மிஸ்பா உல் ஹக்கும் தலைமைதாங்கவுள்ளனர்.
ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு போட்டிகளைக் கொண்ட டுவன்டி டுவன்டி தொடர் 1 – 1 என்ற அடிப்படையில் சமநிலையில் முடிவுற்றது. இந்நிலையில் இரு அணிகளும் ஒருநாள் தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
சார்ஜா விளையாட்டரங்கில் இரு அணிகளுக்கும் சம அளவான ரசிகர்கள்
இருப்பதால் போட்டி இறுதி வரை விறுவிறுப்பாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
துடுப்பாட்ட தரவரிசையில் பாகிஸ்தான் அணியை விட இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. இதனால் போட்டியில் வெற்றிபெறுவதற்கான கூடுதலான வாய்ப்பு இலங்கை அணிக்கே காணப்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பாகிஸ்தான் அணி கணிக்க முடியாத ஓர் அணி என விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment