Wednesday, December 18, 2013

அரச தலைவர்கள் எப்போது வேண்டுமானாலும் வட மாகாணத்தை பார்வையிடலாம்: ஜீ. ஏ. சந்திரசிறி!

18th of December 2013
எமது நாட்டுக்கெதிராக பல அரச தலைவர்கள் பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்தாலும் வடக்கின் நிலைமையை நேரில் கண்டறிய அனைத்து அரச தலைவர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு வழியமைத்துக் கொடுத்துள்ளது என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனறல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
 
தற்போது வடக்கின் நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது. கடந்த நான்கு வருடங்களில் வடக்கு மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தல் மற்றும் அடிப்படை வசதிகளுக்காக 6647 கோடிக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது. வடக்கு மக்களின் வாழ்வு தற்போது முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளது. பலர் உற்பத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
 
2009 தொடக்கம் 2013 வரையான காலப்பகுதியில் கல்வி வளர்ச்சிக்காக 438 மில்லியன் ரூபாவும் சுகாதார வசதிகளுக்காக 4960 கோடி ரூபாவும் கைதொழில் திட்டங்களுக்காக 445 மில்லியன் ரூபாவும் கால்வாய் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 3155 மில்லியன் ரூபாவும் தேசிய பால் உற்பத்திக்காக 296 மில்லியன் ரூபாவும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களை பலப்படுத்தும் நோக்கிலான கைதொழில் திட்டங்களுக்காக 401 மில்லியன் ரூபாவும் அரச செலவிட்டுள்ளதென வடமாகாகண பிரதமச் செயலாளர் அலுவலகம் சுடடிக்காட்டியுள்ளது.
 
மின்னுற்பத்திக்காக 19080 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அத்துடன் சுன்னாகம் மின்னுற்பத்தி நிலையம் மற்றும் கிளிநொச்சி மின்நிலையம் ஆகியவற்றுக்காக மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ்  குடிநீர் திட்டங்களுக்காக  24725 மில்லியன் ரூபாவும் மாகாணா நிர்வாக திட்டத்திற்காக 7082 மில்லியன் ரூபாவும் கிராமிய போக்குவரத்து திட்டத்திற்காக 1140 மில்லியன் ரூபாவும் அரசு செலவிட்டுள்ளது. இத்தனை வசதிகளையும் பெற்ற வடக்கு மக்களது உரிமைகள் மீறப்படுகின்றன என சில எல்டிடிஈ ஆதரவாளர்கள் பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர் என்று வடமாகாகண ஆளுனர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...