15th of December 2013
மாலைதீவின் புதிய ஜனாதிபதி யாமீன் அப்துல் கயூமை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் அழைப்பு மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டிக்ஷன் சரத்சந்திரடேலவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக மாலைதீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் அழைப்பை மாலைதீவு ஜனாதிபதி யாமீன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கு மாலைதீவுக்கும் இடையில் நீண்டகாலமான உறவுகள் இருந்து வருவதாகவும் தனது இலங்கை விஜயம் இந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் யாமீன் தெரிவித்துள்ளார்.
மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரான யாமீன் அப்துல் கயூம் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி தேர்தல் மூலம் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment