Sunday, December 15, 2013

எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு அனுமதி வழங்க முடியாது; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!

15th of December 2013
ஆபிரிக்கா மற்றும் ஏனைய வலய நாடுகளுடனான நீண்டகால நற்புறவை புதுப்பிப்பதே  இலங்கையின் தற்போதைய  வெளிநாட்டுக் கொள்கையாகும்  என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
 
தாம் 2005 ஆம் ஆண்டு முதற்தடவையாக பதவியேற்றதன் பின்னர் இந்த கொள்கை பின்பற்றப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கென்யாவுக்கான நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று மாலை நைரோபியில் உள்ள கென்ய ஜனாதிபதி மாளிகையில் அந்நாட்டு ஜனாதிபதி உஹுரு கென்யாட்டாவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.
 
கடந்த செப்டெம்பர் மாதம் நைரோபி நகரிலுள்ள வெஸ்ட் கேட் வர்த்தகக் கட்டடத் தொகுதிமீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், மற்றும் ஜோமோ கென்யாட்டா விமான நிலையத்தில் பரவிய தீயினால் ஏற்பட்ட பாதுப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அனுதாபம் தெரிவித்தாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
எந்த வகையிலும் பயங்கரவாதத்திற்கு அனுமதி வழங்க முடியாது என கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அதற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
 
ஆபிரிக்க நாடுகளுடன் இலங்கையின் பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தொடர்பில் ஜனாதிபதி மகிழ்ச்சி வெளியிட்டதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் மீள்குடியேற்றம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் பல ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கென்ய ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...