16th of December 2013
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை தொடர்பாக முன் னெடுக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் செய ற்பா டுகளை தோற்கடிக்கவேண்டுமானால் அரசாங்கம் கற்றறிந்த பாடங்க ளும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் முக்கியமானவற்றை
அமுல்படுத்தியாகவேண்டும் என்று அமைச்சரும் முன்னாள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
மேலும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான இணக்கப்பாட்டை உருவாக்கிக்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமையவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் குறித்து அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேலும் குறிப்பிடுகையில்,
யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையில் முன்னேற்றங்களை வெளிப்படுத்தவேண் டும் என்று சர்வதேசம் கூறிவருகின்றது. அந்தவகையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏதாவது சிக்கல்கள் ஏற்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையின் விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையிடுவதை நாங்கள் முழுமையாக எதிர்ப்பதுடன் அவ்வாறு தலையிடக்கூடாது என்று வலியுறுத்துகின்றோம். எமது பிரச்சினையை எம்மால் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் சர்வதேசத்துக்குக் கூறுகின்றோம்.
ஆனால் மார்ச் மாதம் இலங்கை தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் செயற்பாடுகளை தோற்கடிக்கவேண்டுமானால் நாங்கள் செய்யவேண்டிய சில முக்கிய விடயங்கள் உள்ளன. அவற்றை கட்டாயம் செய்தாகவேண்டும்.
குறிப்பாக கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் விரைவாக நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமாகும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அனைத்தையும் விரைவாக அமுல்படுத்த முடியாவிடினும் முக்கியமானவற்றை விரைவாக நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியமாகும். அதன் மூலமே ஜெனிவாவில் நாங்கள் எதிர்கொள்ளப்போகும் நிலைமைகளை சமாளிக்க முடியும்.
இதேவேளை தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்த நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவேண்டும்.
குறிப்பாக இந்த பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எப்படியாவது இணைத்துக்கொள்ள முயற் சிக்கவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நம்பிக்கை ஏற்படும் விதத்தில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற் பாடுகள் அமையவேண்டியது அவசியமா கும்.
எனவே கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வரவழைப்பதுமே ஜெனிவாவில் ஏற்படப்போகும் நிலைமைகளை வெற்றி கொள்வதற்கான வழியா கும் என்றார்,
No comments:
Post a Comment