19th of December 2013
ஐந்து வருடங்களில் சகல பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்களுடன் தமிழ், சிங்கள மொழிகளில் கருமமாற்றுவது தங்களுடைய இலக்காக உள்ளதென பொலிஸ் திணைக்களம் நேற்று புதன்கிழமை கூறியது.
2008 ஆம் ஆண்டிலிருந்து 1500 சிங்கள மொழி பொலிஸ்காரர்களும் 892 தமிழ் மொழி பொலிஸ்காரர்களுக்கும் மொழிப்பயிற்சி வழங்கபபட்டதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது.
மக்களுக்கு சிறந்த சேவையற்றுவதற்கு மொழி தடையாக அமைவது யுத்தம் முடிவதங்கு முன்னரே இனங்கானப்பட்டது. இந்நிலையில் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மொழி தெரிந்த பொலிஸார் கூடுதலாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் நியமிக்கப்பட்டனர்.
இப்போது வடக்கு கிழக்கில் மக்களின் முறைப்பாடுகள் தமிழில் பதியப்படுகின்றன இது பெரிய சாதனையாகும். இன்னும் 5 வருடங்களில் சகல பொலிஸ் நிலையங்களிலும் சிங்களத்துடன் தமிழிலும் கருமங்களை ஆற்றும் வசதிகளை ஏற்படுத்தும் இலக்கை நோக்கி செயற்படுகின்றோம் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண கூறினார்.
தமிழ் பேசும் 240 பொலிஸ்காரர்களுக்கு செவ்வாயன்று புதிதாக சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுவார்கள் என அவர் கூறினார்.

No comments:
Post a Comment