16th of December 2013
பாராளுமன்றத்தை பார்வையிடுவதற்கு முன் அனுமதியோ உறுப்பினர்களின் கடிதங்களையோ
பெற வேண்டிய அவசியமில்லையென்றும் மக்கள் நேரடியாக பாராளுமன்றத்தை பார்வையிட முடியும் என்ற சபாநாயகரின் தீர்மானமானது வரவேற்புக்குரியது அதற்காக ஐ.தே. கட்சியினதும் தனிப்பட்ட ரீதியில் எனதும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என ஐ.தே. கட்சி எம்.பி. அஜித் பி . பெரேரா நேற்று சபையில் தெரிவித்தார் .
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விளையாட்டுத்துறை அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அஜித் பெரேரா எம்.பி. சபாநாயகரின் தீர்மானத்தை வரவேற்று உரையாற்றினார் .
சபையில் இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில் ,
பாராளுமன்றத்தை முன் அனுமதியின்றி பார்வையிடுவதற்கு மக்களுக்கு அனுமதி வழங்கியது பாராட்டுக்குரிய வரவேற்புக்குரிய விடயமாகும் .
கடந்த காலங்களில் பாதுகாப்பு காரணங்களால் அனுமதி வழங்கப்படவில்லை . அது நீக்கப்பட்டு மக்களுக்கு பாராளுமன்றத்தின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன . இதனால் பாராளுமன்றத்திற்கும் மக்களுக்கும் இடையே தொடர்புகள் நெருக்கமாகும் .
அத்தோடு பாராளுமன்ற வாகனத் தரிப்பிடத்தில் அகன்ற திரையில் சபை நடவடிக்கைகள் ஒளிபரப்புச் செய்யப்படுவதோடு தொலைக்காட்சி அலைவரிசையொன்றிலும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது . இதன் மூலம் மக்களுக்கு மேலும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது .
சில கிராமங்களில் இவ் தொலைக்காட்சி அலைவரிசை தெரிவதில்லை . எனவே அங்கு தெரியக்கூடியதாகவுள்ள தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்புச் செய்யவும் .
இவ்வாறான நடவடிக்கைகளால் பாராளுமன்றத்தின் கெளரவத்தையும் உறுப்பினர்களின் நடவடிக்கைகளையும் ஒழுக்கமான முறையில் முன்னெடுப்பதற்கும் வழிவகுக்கும்
அது மட்டுமல்லாது தாம் தேர்ந்தெடுத்து பாராளுமன்றம் அனுப்பிய உறுப்பினர் சபையில் கலந்துகொண்டுள்ளாரா ? தமது பிரச்சினைகளை பேசுகின்றாரா என்பதை தெரிந்து கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றார் .
No comments:
Post a Comment