Sunday, December 15, 2013

யாழ். போதனா வைத்தியசாலையில் நான்காவது நாளாகவும் போராட்டம்

16th of December 2013
யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நான்காவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.
 
சிற்றூழியர்களின் போராட்டத்தினால் நோயாளர்கள் அசௌகரியங்களை
எதிர்நோக்குவதாக எமது யாழ். பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
கடந்த 04 வருடங்களாக, தொண்டர்களாக சேவைபுரியும் தம்மை வெற்றிடங்களுக்கு இணைத்துக்கொள்ளாது, புதியவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
 
இதேவேளை, இந்த விடயம் தொடர்பிலான தகவல்களை அறிந்துகொள்ள, வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்தை தொடர்புகொள்ள பலதடவைகள் முயற்சித்தும், அந்த நடவடிக்கை பலனளிக்கவில்லை.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...