Tuesday, December 17, 2013

ஐ.நா பிரதிப் பொதுச்செயலர் ஜான் எலியாசனை, கோத்தாபாய ராஜபக்ஷ சந்தித்துப் பேச்சு!

17th of December 2013
ஐ.நா பிரதிப் பொதுச்செயலர் ஜான் எலியாசனை, பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். 
 
நியூயோர்க்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இன்னர்சிற்றி பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இந்தச் சந்திப்பின் விபரம் குறித்து நேற்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளரிடம், இன்னர்சிற்றி பிரஸ் மின்னஞ்சல் மூலம் கேள்வி எழுப்பியிருந்தது. 
 
அதற்கு, ஐ.நா பிரதி பொதுச்செயலருக்கும் கோத்தாபாய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்புத் தொடர்பான விபரங்கள் இல்லை என்றும், இது உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வழக்கமான கலந்துரையாடலின் ஒரு பகுதியே என்றும் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளரினால் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...