17th of December 2013
தகவல் தொழில் நுட்பம் கிராமத்துக்கும் சென்றடைய வேண்டும் என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கமைய ஏற்கனவே நாடு முழுவதும் 350 அறிவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இச்செயற்பாட்டை விரிவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் மூன்று எனும் அடிப்படையில் 1,000 அறிவகங்கள் திறக்கப்படவுள்ளன என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
ஹோமாகமயிலுள்ள வத்தரக கனிஸ்ட வித்தியாலத்தில் கணணி ஆய்வு கூடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிராமப்புறங்களிலில் தகவல்தொழிநுட்ப அறிவை விரிவு படுத்தும் வகையில் ஜனாதிபதியால் மஹிந்த சித்தனையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இவ்வாறான செயற்திட்டங்களுக்காக நாம் அனைவரும் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் என கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந் நிகழ்வில் ஆசியப் பிராந்தியத்துக்கான தொலைத் தொடர்பாடல் கழகத்தின் இயக்குணர் கலாநிதி. யூன் ஜூ கிம், பிரதிப்பணிப்பாளர் சாமில் அல்மா, கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment