17th of December 2013
உள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவர் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 14ற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி சபைகளின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
ஆளும் கட்சி உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் உப தலைவர்களும் வரவு
செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இந்நிலை கட்சியின் எதிர்கால நலனை பாதிக்கலாம் என்பதற்காகவே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment