Tuesday, December 17, 2013

மட்டு-படுவான்கரையில் யானையின் தாக்குதலுக்கிலக்காகி 16 வயது சிறுவன் உயிரிழப்பு!

17th of December 2013
மட்டக்களப்பு மாவடத்தின் படுவான்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள நாற்பதுவட்டை பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கிலக்காகி பரிதாபகரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் 16 வயதடைய கேதாரபிள்ளை பேகேஸ்வரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மோற்கொண்டுவரும் இதேவேளை குறித்த படுவாக்கரைப் பிரதேசத்தில் கடந்த ஒருவார காலத்தினுள் 3 பேர் இவ்வாறு காட்டு யானைகளின் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர்.

இதுவரையில் படுவான்கரையில் அமைந்துள்ள வெல்லாவெளி பிரதேசத்தில மாத்திரம் பத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதனைவிட வணக்கஸ்தலங்கள் மற்றும் குடியிருப்புக்கள் மற்றும் பயிரினங்களையும் இவ்வாறு காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அப்பிரதேச பொது மக்கள் தெரவிக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க காட்டு யானைகளை அப்புறப் படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் படுவான்கரையில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேசத்தில் தாக்குதல் நடாத்துகின்ற காட்டு யானைகளை அப்பறப் படுத்தவது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் அவர்கள் வன இலாக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டாலும் அதனை அந்த குறித்த அதிகாரிகள் பொருட்படுத்துகின்றார்கள் இல்லை என அண்மையில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அனர்த்த முன்னாயத்த கூட்டத்தில் போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...