Monday, December 16, 2013

வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிளவடைவதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை: முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா!

16th of December 2013
வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிளவடைவதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்படுவதனை ஜனாதிபதி எப்போதும் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்ப்பிற்கு ஜனாதிபதி நேரடியாகவே எதிர்ப்பை வெளியிட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகப் பற்றற்ற சந்திப்பொன்றின் போது தீர்ப்பு குறித்து ஜனாதிபதிக்கு தாம் அறிவித்ததாகவும், அதற்கு ஜனாதிபதி கடும் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
உங்களுக்கு பைத்தியமா' என ஜனாதிபதி தம்மிடம் கேட்டதாகவும், வடக்கு கிழக்கு மாகாணங்களை பிளவுபடுத்தினால் யுத்தத்தை முன்னெடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்ப்பு அளிக்கப்பட்ட சில தினங்களில், மாவிலாறு அணையை புலிகள் மூடியதாகவும் அதன் பின்னரே யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...