21st of December 2013
நெடுந்தீவு பிரதேச சபையின் தலைவர் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டுள்ள கமலேந்திரன் தொடர்பில் நாம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம் . அந்தச் சம்பவத்துக்கு நாம் தார்மீகப் பொறுப்பு எடுத்துள்ளதுடன் அவரை கட்சியிலிருந்தும் விலக்கியுள்ளோம் . தனிப்பட்ட பிரச்சினை என்றாலும் அதற்கான தார்மீகப் பொறுப்பை நாம் ஏற்றிருக்கின்றோம் என்று ஈ.பி.டி.பி. யின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார் .
இதுகுறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ,
இந்த விவகாரம் நீதிமன்றில் தற்போது உள்ளது . இக்கொலையுடன் தனக்கு சம்பந்தம் இல்லை என்று அவர் கூற முனைகின்றார் . எதுவானாலும் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும் . அதுவரை நாம் சகல பொறுப்புக்களிலிருந்தும் அவரை நிறுத்தியுள்ளோம் என்று கூறினார் .
No comments:
Post a Comment