17th of December 2013
ஒரு மாதத்துக்கு முன்னர் குறித்த ஆமையை மூன்றரை முதல் ஐந்து கோடி ரூபாவுக்கு விலைபேசி சிலர் வந்த போதிலும் கூட ஆமைகள் பாதுகாப்பு நிலையத்தின் அதிகாரிகள் அதனை நிராகரித்துள்ளனர்.
குறித்த விடயம் திருட்டுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 'மான' என்ற இனத்தைச் சேர்ந்த வெள்ளை நிற எலி என்ற பெயருடைய நான்கு ஆமைகள் பாதுகாப்பு நிலையத்தில் காணப்படுகின்றன. அவற்றுள் பெரியதும் சுமார் 10 கிலோ கிராம் நிறையும் 60 சென்ரிமீட்டர் நீளம், 39 சென்ரி மீட்டர் அகலமும் கொண்ட பெண் ஆமையே காணாமல் போயுள்ளது.
கடந்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தன்று ஆமைகள் பாதுகாப்பு நிலையத்திற்கு வருகை தந்த அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா இந்த ஆமைகளுக்கு விஷேட பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்
பாதுகாவலர் நால்வர் மற்றும் நாய் ஒன்றினதும் பாதுகாப்பிலிருந்த ஆமை எவ்வாறு காணாமல் போனது என்பது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காவலர்கள் நால்வரும்; நாய் ஒன்றும் பாதுகாப்பில் இருந்தபோது கொஸ்கொட ஆமைகள் பாதுகாப்பு நிலையத்தில் விலைமதிக்க முடியாத அரிதான வகை 'எலி' என்ற பெயரைக் கொண்ட ஆமையொன்று திருடப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்திலான இந்த ஆமை வகை உலகில் மிகவும் அரிதான இனமாகும்.
ஒரு மாதத்துக்கு முன்னர் குறித்த ஆமையை மூன்றரை முதல் ஐந்து கோடி ரூபாவுக்கு விலைபேசி சிலர் வந்த போதிலும் கூட ஆமைகள் பாதுகாப்பு நிலையத்தின் அதிகாரிகள் அதனை நிராகரித்துள்ளனர்.
குறித்த விடயம் திருட்டுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 'மான' என்ற இனத்தைச் சேர்ந்த வெள்ளை நிற எலி என்ற பெயருடைய நான்கு ஆமைகள் பாதுகாப்பு நிலையத்தில் காணப்படுகின்றன. அவற்றுள் பெரியதும் சுமார் 10 கிலோ கிராம் நிறையும் 60 சென்ரிமீட்டர் நீளம், 39 சென்ரி மீட்டர் அகலமும் கொண்ட பெண் ஆமையே காணாமல் போயுள்ளது.
கடந்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தன்று ஆமைகள் பாதுகாப்பு நிலையத்திற்கு வருகை தந்த அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா இந்த ஆமைகளுக்கு விஷேட பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தார்
பாதுகாவலர் நால்வர் மற்றும் நாய் ஒன்றினதும் பாதுகாப்பிலிருந்த ஆமை எவ்வாறு காணாமல் போனது என்பது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment