17th of December 2013
காத்தான்குடி கல்விக்கோட்டத்தி
ற்கு உற்பட்ட ஜாமியுழாபிரீன் வித்தியாலயத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தினை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நேரில் சென்று பார்வையிட்டார்.
காத்தான்குடி அல்-ஹிறா வித்தியாலயத்தில் இருந்து கல்வியமைச்சின் புதிய கல்வித்திட்டத்திற்கு அமைவாக பிரித்தெடுக்கப்பட்டு ஆற்றங்கரை பகுதியில் தற்காலிக கொட்டிளில் இயங்கிவந்த ஜாமியுழாபிரீன் வித்தியாலயம் மாணவர்களின் இடப்பற்றாக்குறையினை கவனத்திற் கொண்டு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதியொதிக்கீட்டில் மாடிக்கட்டிடமாக புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது.
இக் கட்டிட வேலைகளை பார்வையிட பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் திடீர் விஜயமொன்றை சமீபத்தில் மேற்கொண்டு பார்வையிட்டதுடன் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துமாரும் பொறுப்பான அதிகாரிகளுக்கும் வேண்டுகோள்விடுத்தார்.
No comments:
Post a Comment