22nd of December 2013
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அமைப்பது தொடர்பில் தொடர்பில் இலங்கை அரசாங்கம், தென் ஆபிரிக்காவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மாதமளவில் தென் ஆபிரிக்க பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்,
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது நீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரங்களைக் கொண்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக தென் ஆபிரிக்காவில் நிலவி வந்த இனப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க இந்தப் பொறிமுறைமை வழிகோலியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் செயற்படும் என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகியன வௌ;வேறு நோக்கங்களின் அடிப்படையில் சேவையாற்ற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு போதியளவு அதிகாரங்களை வழங்கவும் பொருத்தமான ஒருவரைத் தலைவராக நியமிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாக தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு நிகரான பொறிமுறைமை ஒன்று இலங்கையில் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை அமைப்பது தொடர்பில் தொடர்பில் இலங்கை அரசாங்கம், தென் ஆபிரிக்காவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மாதமளவில் தென் ஆபிரிக்க பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்,
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது நீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரங்களைக் கொண்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட காலமாக தென் ஆபிரிக்காவில் நிலவி வந்த இனப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க இந்தப் பொறிமுறைமை வழிகோலியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் செயற்படும் என ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஆகியன வௌ;வேறு நோக்கங்களின் அடிப்படையில் சேவையாற்ற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு போதியளவு அதிகாரங்களை வழங்கவும் பொருத்தமான ஒருவரைத் தலைவராக நியமிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment