Wednesday, January 1, 2014

விசேட பிரமுகர்களின் மேடை சரிந்ததில் பலருக்கு காயம்!

1st-january,2014
கொழும்பு ஹில்டன் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விசேட பிரமுகர்களின் மேடை சரிந்து விழுந்ததுள்ளமையினால் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தினால் ஹோட்டல் வளாகத்தில் எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்திக்கிடந்தது.

நேற்றிரவு நடத்தப்பட்ட புதுவருட விருந்துபசாரத்தின் போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் மகனும் இன்னும் பல முக்கியஸ்தர்களும் அமர்ந்திருந்த மேடையே இவ்வாறு பொறிந்து வீழ்ந்துள்ளது.

இதனால் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர் காயமடைந்தனர். இந் மேடையில் சுமார் 200 பேர் வரையிலும் இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘முழு மேடையும் பொறிந்து விழுந்ததனால் எல்லா இடமும் இரத்தம் சிந்திக்கிடந்தது. நாம் அம்புலன்ஸ் இல்லாத நிலையில் காயப்பட்டவர்களை எமது வாகனத்தில் அவசரமாக ஏற்றிச்சென்றோம்’ என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.

இந்த இடம் கேளிக்கை விரும்பிகளுக்கு மிகவும் விருப்பமான இடமாக இருந்தது. எனினும் ,இந்த  சம்பவம் பற்றி கருத்துக்கூற ஹில்டன் மறுத்துவிட்டது.

இந்த சம்பவத்துக்கு நாம் பொறுப்பேற்றுள்ளோம். மேடை அமைப்பு வேலை ஒப்பந்த அடிப்படையில் வேறு ஒரு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும் நாமே இதற்கு பொறுப்பேற்கின்றோம் என இந்த நிகழ்வின் ஒழுங்கமைப்புக்கு பொறுப்பான பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

விருந்துபசாரத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற பலரும் ஹில்டன் ஹோட்டலையும் விருந்து ஏற்பாட்டாளர் கன்ரலோப் பிளே கிறவுண்டையும் குற்றங் கூறினர்.காயப்பட்டவர்களுக்கு உதவுவதை விடவும் உடைக்கப்படாத மதுபான போத்தல்களை சேகரிப்பதே அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது’ என இந்த நிகழ்வுக்கு பொறுப்பானவர்களில் ஒருவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

ஏற்பாட்டாளர்கள் காயப்பட்டவர்களை கவனிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் வருந்திக்கொண்டிருந்த போது அவர்கள், கேளிக்கையை தொடர்வதிலேயே அக்கறையாக இருந்தனர் என இன்னொருவர் கூறியிருந்தார்.

எங்கும் இரத்தம் காணப்பட்டது. மக்கள் உதவி கேட்டு கதறினர். எனது நண்பிக்கு கணுக்கால் உடைந்துவிட்டது. இன்னொருவருக்கு உடலில் எரிகாயம் காணப்பட்டது.

கை,கால்,நெஞ்செலும்பு உடைந்தவர்களாலும் கண்ணாடி வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டவர்களினாலும் நவலோக்க வைத்தியசாலை நிரம்பி வழிந்தது  என முகப்புத்தகத்தில் கூறப்பட்டிருந்தது.
 
 
 
 
 

No comments:

Post a Comment