Wednesday, January 1, 2014

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில்: இலங்கை மறுப்பு!

1st-january,2014
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை இலங்கை மறுத்துள்ளது. அவர், தன்னுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தான் விரும்பிய இடங்களுக்கு சென்றுவருகின்றார் என்றும் தெரிவித்துள்ளது.

அவரை வீட்டுக்காவலில் வைப்பதற்கு பொலிஸாருக்கோ அல்லது இராணுவத்தினருக்கோ எவ்விதமான அதிகாரங்களும் இல்லை என்று யாழ்.பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் டயஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உத்தியோகபூர்வமற்ற விஜயமொன்றை மேற்கொண்டுள்ள  கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.;

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...