Friday,17th of January 2014
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கா
அறிவித்துள்ளது. சட்டம் மற்றும் நீதித்துறையை மேம்படுத்தும் நோக்கில்
இவ்வாறு உதவிகள் வழங்கப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல்
ஜே. சிசன் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுக்கிற்கான சிவில் சமூகத்தின் ஆதரவு என்ற சட்டத்தரணிகள் சங்கத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். மூன்றாண்டு விசேட திட்டமொன்றின் மூலம் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சட்டத்துறை உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள வழியமைக்கும் என அறிவித்துள்ளார்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்துவதற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நூலகம் மற்றும் கேட்போர் கூடத்தை புனரமைக்கவும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment