Thursday,16th of January 2014
இந்து சமுத்திரத்தில் கடல் கொள்ளைக்காரர்களை எதிர்கொள்ளவும் வளைகுடா
நாடுகளின் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் கடற்புலிகளை தோற்கடித்து
அழித்தொழித்த இலங்கையின் அனுபவங்கள் பெரும் பயன்தரக்கூடியவை என வெளிவிவகார
பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா
ஓமான் ட்றிபியூன் பத்திரிகைக்கு
தெரிவித்துள்ளார்.“சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை செய்யவுள்ள
இலங்கை, அரபு நாடுகளுக்கான தென் கிழக்காசிய நுழைவாயிலாக வரவுள்ளது. தென்
கிழக்காசிய நாடுகளுக்கான கடல் பாதையில் உள்ள கொழும்பு துறைமுகம், பெரிய
தாய்க் கப்பல்களையும் உள்வாங்கும் தகுதியுள்ளது.
எனவே இலங்கை, வளைகுடா நாடுகளுக்கான மீள் ஏற்றுமதி மையமாக மாற முடியும்.
ஓமான் உட்பட வளைகுடா நாடுகள் கொழும்புக்கு அனுப்பிவைக்கும் பொருட்களை
எம்மால் சிறு கப்பல்கள் மூலம் இந்த பிராந்தியத்திலுள்ள வேறு நாடுகளுக்கு
அனுப்பிவைக்க முடியும்" என பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா மேலும்
தெரிவித்தார்
No comments:
Post a Comment