Sunday,12th of January 2014
புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென வட மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ராமநாதன் அங்கஜன் கோரியுள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் போராளிகள் அமைதியான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ள போதிலும், ஒரு சிலருக்கு மட்டுமே தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் போராளிகளில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஊனமுற்றிருப்பதனையும் கவனிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான முன்னாள் புலிபோராளிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டியது வட மாகாண சபையின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாண சபையின் நடவடிக்கைகளை ஒட்டுமொத்த நாடும், ஒட்டுமொத்த உலகமும் அவதானித்து கொண்டிருப்பதாகவும், இதனால் பிழைகள் விடுவதற்கு வாய்ப்பு கிடையாது எனவும் அங்கஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment