Saturday,11th of January 2014
அங்கீகாரத்தோடு விரைவில் நடைமுறைக்கு வரும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார் .
நீதிபதிகளுக்கு என ஒழுக்கக் கோவை ஒன்று தேவையாகவுள்ளது . அதனை
விரைவில் வர்த்தமானியில் பிரசுரிப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .
மல்லாகம் நீதிமன்றத்தினை நேற்று முன்தினம் திறந்து வைத்த பின்னர்
உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
இலங்கையில் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் சர்வதேச நாடுகளால் விமர்சனம்
செய்யப்படுகின்றது . அதனால் சட்டத்தின் ஆட்சியை மேலும் சிறந்ததாக்கும்
முயற்சியில் ஈடுபட்டு வருகின்றோம் .
போரின் பின்னர் நாட்டில் படிப்படியாக சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தி
வருகின்றோம் . மாகாண சபைத் தேர்தலைக் கூட ஜனநாயக ரீதியில்
நடத்தியிருந்தோம் . இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பில் புதிய
சட்ட நியமங்களை அறிமுகப்படுத்த முடியும் . இதன் மூலம் நாட்டின் சட்டத்தின்
ஆட்சியை சிறந்ததாக மாற்ற முடியும் . அதற்கான முயற்சியில் ஈடுபட்டு
வருகின்றோம் .
நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பாக பரந்த கலந்துரையாடலை நீதி அமைச்சு
மேற்கொண்டு சட்ட ஆலோசனைக்குழு மூலமாக அதனைச் சட்டமாக்கியுள்ளது .
விரைவில் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் .
நீதித்துறையில் இருப்பவர்கள் மக்களுக்குப் பொறுப்புக் கூறவேண்டும் .
இதுபற்றி பிரதம நீதியரசர் சில திட்டங்களை வகுத்து வருகிறார் . வெறும்
சட்டங்களால் மாத்திரம் நாட்டில் நீதி , நிர்வாகத்தை சீர்செய்துவிட முடியாது
. பொதுமக்கள் தமது பிணக்குத் தொடர்பில் இறுதியாகவே நீதிமன்றை
நாடுகிறார்கள் . இவ்வாறு வரும் அவர்கள் அச்சத்துடனேயே வருகிறார்கள் . ஆனால்
அவர்கள் நீதிமன்றுக்கு அச்சத்துடன் வரவேண்டிய அவசியமில்லை .
No comments:
Post a Comment