Tuesday, January 7, 2014

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் “வழமையான மீன்பிடிப் பிரதேசம்” என்று கூறப்படுதை இலங்கை நிராகரித்துள்ளது!

Wednesday,8th of January 2014
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் “வழமையான மீன்பிடிப் பிரதேசம்” என்று கூறப்படுதை இலங்கை நிராகரித்துள்ளது.
இலங்கையின் கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் மன்னார் வளைகுடாவில் தமது வழமையான மீன்பிடிப் பிரதேசத்தில் தொழில் செய்யும் போது இலங்கை கடற்படையினரால் துன்புறுத்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்திய- இலங்கை கடற்பிரதேசம் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்தின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்போது தமிழக மீனவர்களுக்கு என்று வழமையான கடல்பகுதி என்று ஒன்று வரையறுக்கப்படவில்லை.
இந்தநிலையில் தமது எல்லைக்குள் வரும் வெளிநாட்டு மீனவர்களை தடுப்பதற்கு இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுப்பதாக கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டார்.
இந்திய கரையோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 59 இலங்கை மீனவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சிறைகளில் சுமார் 150 இலங்கை மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறைகளில் 300 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சட்டவிரோதமாக இந்திய எல்லையில் மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறி, தமிழக காவல்துறையினர் 59 மீனவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் இலங்கையின் நீர்கொழும்பு, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
கடந்த நவம்பர் மாதத்தில் இவர்கள் இந்திய கரையோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment