Thursday, January 9, 2014

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ராஜதந்திர ரீதியில் எதிர்கொள்ள தயார்-கெஹெலிய ரம்புக்வெல்ல!

Thursday,9th of January 2014
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட
உள்ள யோசனையை சந்திக்க தயாராக இருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் .

அமெரிக்கா தகவல்களை எப்படி திரட்டி வருகிறது என்பதை அரசாங்கம் அறிந்து வைத்துள்ளது . அந்த செயற்பாட்டில் அமெரிக்க ஈடுபட்டுள்ளதையும் அரசாங்கம் அறியும் .

மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் எந்த யோசனையாக இருந்தாலும் அதனை அரசாங்கம் ராஜதந்திர ரீதியில் எதிர்நோக்குவதற்காக ஏற்பாடுகளை செய்து வருகிறது .

வெற்றியோ தோல்வியோ அரசாங்கம் அதனை எதிர்கொள்ளும் . ஏற்கனவே மனித உரிமை ஆணைக்குழுவில் ஒரு முறை அரசாங்கம் வெற்றிப்பெற்றதுடன் ஒரு முறை தோல்வியை சந்தித்துள்ளது .

வேறு எதற்காகவும் அல்ல இலங்கை மக்களுக்காக எந்த சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகவே உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

கடந்த முறை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைத்த இலங்கைக்கு எதிரான யோசனைக்கு இலங்கைக்கு ஆதரவாக 30 நாடுகள் வாக்களித்தன . இதனால் அது முழுமையான தோல்வியல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார் .

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா , இலங்கைக்கு எதிரான புதிய யோசனையை கொண்டு வரும் என அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment