17th of December 2013
மன்னார் மாவட்ட போதகர்கள் ஐக்கியத்திற்கும் , வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக
வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா . டெனிஸ்வரன் அவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் சாந்திபுரத்தில் அமைந்துள்ள மகிமையின் ஆலயத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வின்போது தங்களது பிரச்சினைகள் தொடர்பில் போதகர்கள் தங்களது கருத்துக்களை அமைச்சரிடம் முன்வைத்தனர் .
அதன் பின்னர் உரையாற்றிய அமைச்சர் தனது உரையில் மதங்களினூடாக மக்களை சமாதானமாக வாழ வையுங்கள் .
நான் நிலையான அபிவிருத்திகளை மக்களுக்கு வழங்குவேன் என்றும் வெகு விரைவில் சர்வ மத அமைப்பை மீளக்கட்டி அமைக்கவேண்டும் என்றும் அதனூடாக அனைத்து மதங்களை சார்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழும் நிலை நிச்சயமாக உருவாகும் என்றும் தெரிவித்தார் .

No comments:
Post a Comment