Tuesday, December 17, 2013

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சுகாதார சேவைக்கு சுமார் 10400 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு!

17th of December 2013
சுகாதார சேவைக்கு சுமார் 10400 பேருக்கு  புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (17) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்  நடைபெற்றது.

.சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மாகாண சபை அமைச்சர்கள்  ஐக்கிய தாதிமார் சங்க தலைவர் வண. முறுத்தட்டுவே ஆனந்த தேரர் , சுகாதார  அமைச்சின் செயலாளர் டாக்டர்.நிஹால் ஜயதிலக்க மற்றும் தாதிமாரின் பெற்றோர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் 6025 தாதிகளும் மேலதிக சுகாதார நடவடிக்கைகளுக்கு 1999 பேரும் தாதிப்பயிற்சி பெற்ற  2000 
பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன
இந்நியமனத்தின் பின்னர் மருத்துவமனைகளில் பணியாற்றும் தாதிகளின் எண்ணிக்கை முப்பத்தாறாயிரத்துக்கும் அதிகமாகும். இந்த எண்ணிக்கையை ஐம்பதாயிரமாக அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இப்புதிய நியமனங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Top Eng News Websites in links in

======================================================================== ===================================================================...